நேற்றுவரை ஐபிஎல் தொடரில் 18 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் இன்று 19வது லீக் போட்டியில் சென்னை அணியும் பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஏனெனில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற சென்னை அணியும், அதே நேரத்தில் பெங்களூர் அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் இன்றைய போட்டியை தொடங்கினர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 62*, டு பிளெசிஸ் 50 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 192 ரன்கள் இலக்குடன் இறங்கிய பெங்களூர் அணி 9 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற ஜடேஜா. காரணம் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் ஜடேஜாவின் பங்களிப்பு சென்னை அணி வெற்றி பெற மிகவும் உதவியது.
இப்போட்டியை பார்த்த ரசிகர்கள் சென்னை VS பெங்களூர் இல்லை. ஜடேஜா VS பெங்களூர் என கூறினார். பேட்டிங்கில் ஜடேஜா 28 பந்துகளில் 62* ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். அதில் 4 பவுண்டரி 5 சிக்சர்கள் அடங்கும். ஜடேஜா அடித்த 5 சிக்ஸர் கடைசி ஓவரில் அடிக்கப்பட்டது.
கடைசி ஓவரில் ஜடேஜா மொத்தமாக 36 ரன்கள் குவித்தார். அந்த ஓவரில் 5 சிக்சர், ஒரு பவுண்டரி 2 ரன்கள் என மொத்தம் 36 ரன்கள் அடித்தார். அதேபோல ஜடேஜா பீலிங் செய்யும்போது 3 விக்கெட், ஒரு ரன் அவுட் செய்தார். மேலும் 4 ஓவர் வீசி ஜடேஜா வெறும் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
அதிலும் குறிப்பாக ரவீந்திர ஜடேஜா இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் . அதில் மேக்ஸ்வெல், ஏ.பி டிவில்லியர்ஸ் அடங்குவார்கள்.
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…