ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது.
ஐபிஎல் போட்டி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். அதிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்றால் அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் என்றே கூறலாம். ஐபிஎல் போட்டிகளில் எல் கிளாசிக்கோ என்று அழைக்கப்படும் இந்த போட்டியை தான் எல்லா அணி ரசிகர்களும் விரும்பி பார்ப்பார்கள்.
அந்த அளவிற்கு சென்னை – மும்பை மோதும் போட்டி என்றாலே எதிர்ப்ப்புகள் அதிகமாக எழுந்துவிடும். இரண்டு அணிகளும் இதுவரை 5 முறை கோப்பைகளை வென்று அதிகமுறை கோப்பைகளை வென்ற அணிகளாக இருந்து வருகிறது. இந்த சீசனில் முதன் முறையாக இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை அணியை சென்னை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் 36 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. இதில் 16 முறை சென்னை அணியும், 20 முறை மும்பை அணியும் வெற்றிபெற்றுள்ளது. அதைப்போல இந்த இரண்டு அணிகளும் வான்கடே மைதானத்தில் 12 போட்டிகள் விளையாடி இருக்கிறது. இதிலும் 7 முறை மும்பை அணி தான் வெற்றிபெற்றுள்ளது. 5 முறை மட்டுமே சென்னை வெற்றிபெற்றுள்ளது.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிவிவரப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதைப்போல மும்பை அணி 5 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று 7-வது இடத்தில் உள்ளது. எனவே, இன்று நடைபெறும் போட்டியில் கண்டிப்பாக வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் முன்னுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்புடன் இரண்டு அணிகளும் களம் காண்கிறது.
மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் சர்மா , இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர் ), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…