ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் இருக்கும் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.
நேருக்கு நேர் :
இதற்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக 3 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் 2 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் வெற்றி பெற்று இருக்கிறது. ஒரே ஒரு முறை மட்டும் தான் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்று இருக்கிறது. எனவே இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்போடு இரண்டு அணிகளும் களம் காண்கிறது.
இரண்டு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று இருக்கும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இன்றயை போட்டியில் வெற்றிபெற்று நேருக்கு நேர் மோதிய போட்டிகளின் வெற்றியை சமன் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வானிலை அறிக்கை :
சவாய் மான்சிங் மைதானத்தில் வெப்பநிலை சுமார் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரப்பதம் சுமார் 15% இருக்கும். 5.52 மீ/வி வேகத்தில் காற்று வீசக்கூடும். கிளவுட் கவர் எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் சற்று நன்றாக இருப்பதால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சிரமமாக இருக்கும் என கூறப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள் (Probable Playing XI) :
ராஜஸ்தான் வீரர்கள் :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரியான் பராக் (அல்லது) ரோவ்மேன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
லக்னோவீரர்கள் :
கைல் மேயர்ஸ் (அல்லது) குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன் (WK), ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர், மொஹ்சின் கான்
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…