இன்று டபுள் டமாக்கா: லக்னோ vs குஜராத்.., ஐதராபாத் vs பஞ்சாப் பலப்பரீட்சை.!
ஐபிஎல் 2025-ன் 26 வது மற்றும் 27வது போட்டிகளில் லக்னோ vs குஜராத் மற்றும் ஐதராபாத் vs பஞ்சாப் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

லக்னோ : நடப்பு ஐபிஎல் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கையில், இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3.30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இன்றைய தினம் எந்த 2 அணிகள் ஜெயிக்க போகுது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
LSG vs GT
முதல் போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3.30மணிக்கு தொடங்குகிறது. குஜராத் அணி தொடர்ந்து நான்கு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதே நேரத்தில், எல்எஸ்ஜி அணி தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளைப் பெற்று வருகிறது, மேலும் இன்றைய தினம் தனது சொந்த மண்ணில் வெற்றி பெற முயற்சி செய்யும். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே இதுவரை மொத்தம் 5 போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில் குஜராத் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, அதே நேரத்தில் லக்னோ 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
SRH vs PBKS
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி, இன்று இரவு 7:00 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும். ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளுக்குப் பிறகு, ஹைதராபாத் அணி 2 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்து தற்போது ஆறு புள்ளிகளை ஐந்தாவது இடத்தில் வைத்துள்ளது. இதுவரை, ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும் 23 போட்டி நடைபெற்றுள்ளது. அதில், ஹைதராபாத் அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது, அதே நேரத்தில் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.