#U19WC2024 : இங்கிலாந்தை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி ..!

19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை தென் அப்பிரிக்காவில் வைத்து நடைபெற்று  வருகிறது. தற்போது இந்த தொடரில்  சூப்பர் சிக்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நான்கு போட்டிகள் நடைப்பெற்று முடிவடைந்து உள்ளது.

விமானத்தில் குடித்த தண்ணீர்.? மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதி.! போலீசில் புகார்.! 

 

ஆப்கானிஸ்தான் vs அமெரிக்கா :-

தொடரின் 28 வது போட்டியாக ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதியது. டாஸ்-ஐ வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அமெரிக்கா அணி 48.2 ஓவருக்கு வெறும் 148 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அல்லா கசன்ஃபர் 4 விக்கெட்டை கைப்பற்றினார்.

அதன்பின் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் அமெரிக்கா அணியின் பந்து வீச்சை சமாளிக்க  முடியாமல் திணறியது. பின்பு நிதானத்தில் ஆடிய அந்த அணி 49.3 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியில் ரஹிமுல்லா சுர்மதி 37* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றியை பெற்று தந்தார். இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

நேபால் vs வங்காளதேசம் :- 

இந்த தொடரின் 29வது போட்டியாக நேபாளம் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று நேபால் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 49.5 ஓவர்களில் வெறும் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிக பட்சமாக பிஷால் பிக்ரம் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வங்காள அணியில்  டவுல்லா போர்சன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

பின் 170 எனும் எளிய இலக்கை அடைய முனைப்புடன் களமிறங்கிய வங்காள அணி.  தொடக்கம் சற்று தடுமாறினாலும் சிறப்பான ஆட்டத்தையே வங்காள அணி வெளிப்படுத்தினர். ஜிஷான் ஆலம் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க,  அரிஃபுல் இஸ்லாம் 59* எடுத்து இறுதி வரை  ஆட்டமிழக்காமல் நின்று அணியின் வெற்றிக்கி வித்திட்டார். இதனால் வங்காள அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து : –

தொடரின் 30வது போட்டியாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச தேர்வு செய்ததால் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் ஜொலித்தனர். ஆஸ்திரேலிய கேப்டனான ஹக் வெய்ப்ஜென் 120 ரன்கள் எடுத்திருந்தார். இதன் காரணமாக இறுதியில்  அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து  50 ஓவருக்கு 266 ரன்கள் எடுத்தது.

அதன் பின் 267 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே ரன்கள் எடுக்க தடுமாறியது. அதன் பின் மழை காரணமாக ஆட்டம் சற்று நேரம் நிறுத்த பட்டது. மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கிய போது ஆட்டத்தின் ஓவர்களும் ரங்களும்  குறைக்கபட்டது.  ஆட்டம் ஆரம்பித்த சில மணி நேரங்களில் ஆஸ்திரேலிய அணி மிக சிறப்பாக பந்து வீசியதில் இங்கிலாந்து அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் DLS விதிப்படி வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா:- 

தொடரின் 31 வது போட்டியாக ஜிம்பாப்வே அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தென் ஆப்பிரிக்காவின் சிறப்பான பந்து வீச்சில் மிக மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இதனால் 29.2 ஓவருக்கு அனைத்து  விக்கெட்டையும் இழந்து 102 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்காவின் சார்பாக குவேனா மபகா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதை தொடர்ந்து எளிய இலக்கான 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது. தொடக்கம் முதலே ஜிம்பாப்வேயின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். மிக சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 13.3 ஓவர்களிலேயே 103 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ஆட்டமிழக்காமல்  53* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் தென் ஆபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest