உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி:மழை காரணமாக இன்றைய ஆட்டமும் ரத்தாகுமா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இன்றைய 5-வது நாள் ஆட்டம்,மழை காரணமாக ரத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூ.டி.சி) இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.இப்போட்டியில் நியூஸிலாந்து அணியில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டை பறித்தார்.
அதன்பின்னர்,களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் 101/2 என்ற நிலையில் இருந்தனர்.இதனையடுத்து,இறுதிப் போட்டியின் 4 வது நாள் ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டது.ஆரம்பத்தில் மோசமான வானிலை காரணமாக முதல் அமர்வு தாமதமானது,பின்னர் முழு ஆட்டமும் நிறுத்தப்பட்டது.
முன்னதாக,போட்டியின் இரண்டாவது மற்றும் மூன்றாம் நாள் மோசமான போதுமான வெளிச்சமின்மையால் பாதிக்கப்பட்டது.தொடர்ச்சியான மழை மற்றும் ஈரமான வெளிப்புறம் காரணமாக முதல் மற்றும் நான்காவது நாள் போட்டியும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில்,ஐந்தாவது நாள் போட்டியும் வானிலை மாற்றம் காரணமாக ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை 62-67 சதவீத ஈரப்பதத்துடன் மேகமூட்டம் இருக்கும்,இருப்பினும்,உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளதால்,5 ஆம் நாள் ஆட்டமும் மழை காரணமாக பாதிக்கப்படக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
“It’s advantage New Zealand, but it’s a pitch you can get rolled on.”@Nassercricket and @cmacca10 preview day five of the #WTC21 Final. pic.twitter.com/UuqKhv62Ab
— ICC (@ICC) June 22, 2021