NZvsSL: நடப்பு ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ஆனது அரையிறுதியை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் மொத்தமாக 45 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 40 போட்டிகள் முடிந்துள்ளது. இந்த போட்டிகளை தொடர்ந்து மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
அதன்படி, இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் 16 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து, பங்களாதேஷ், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகள் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளன. இதனால் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளில் எந்த அணி இறுதிக்கு தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் 41வது லீக் போட்டியானது இன்று பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை அணியுடன் நேருக்கு நேர் மோத உள்ளது
இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், ரன்ரேட் அல்லது புள்ளிகளின் அடிப்படையில் அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். இதற்கு அடுத்ததாக உள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பட்சத்தில், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்லும்.
தற்போது நியூசிலாந்து +0.398, பாகிஸ்தான் +0.036, ஆப்கானிஸ்தான் +0.338 என்ற அளவில் ரன்ரேட்டை வைத்துள்ளன. நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 101 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் நியூசிலாந்து 51 முறையும், இலங்கை 41 முறையும் வென்றுள்ளன. 8 போட்டிகள் முடிவில்லாமல், 1 போட்டி சமமாகவும் முடிந்துள்ளது.
இன்று போட்டி நடைபெறும் மைதானத்தை பார்க்கையில், பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானம் சிறிய அளவிலான எல்லைகளை கொண்ட ஒரு மைதானம் ஆகும். இது பேட்டிங் செய்யும் அணிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சிறிய மைதானம் என்பதால் பவுண்டரிகள் அடித்து அதிக ரன்கள் எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இப்போது மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…