2019 உலகக்கோப்பையில் நடந்த போல இன்று… வைரலாகும் ஸ்கோர்..!
இந்தியா ,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே உலகக்கோப்பையின் 5 வது லீக் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிங்கிய ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் ஆல் அவுட் ஆகி 199 ரன்கள் எடுத்தனர். 200ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சொதப்பலான ஆட்டத்துடன் தொடங்கியது. காரணம் ரோஹித், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று முக்கிய வீரர்கள் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இதற்கிடையில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க கோலி மற்றும் ராகுல் போராடி வருகின்றனர். இந்திய அணி 97 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் கோலி 48* ரன்களும் , ராகுல் 46* ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், 2019ல் நடந்த 50 ஓவர் உலககோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 3.1 ஓவரில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. அதேபோல, நடப்பு உலககோப்பை தொடரின் தனது முதல் போட்டியிலும் இந்திய அணி 3.1 ஓவரில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்த 2 போட்டிகளின் ஸ்கோர் கார்டுகளையும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.