இன்று முதல் ஒருநாள் போட்டி !!ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா….

Default Image
  • ஆஸ்திரேலியா அணி  டி20 தொடரை 2-0 என்ற கணக்கில்  வென்றது.
  • இன்று  இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

லோகேஷ் ராகுல் சரவெடியாக வெடித்து, அவர் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை இழந்தார்.தவான் கடுமையாக போராடி 24 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் ஆறு பந்துகளுக்கு ஒரு ரன் எடுத்து வெளியேறினார்.

 

இதன் பின்னர் இந்திய அணி 20 ஒவர்களின் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 190  ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி  72*  ரன்கள் அடித்தார்.தோனி 40 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்  இதன் பின்னர் 191 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் ஷார்ட் 28 பந்துகளில் 40 ரன் குவித்து சிறப்பான தொடக்கத்தை அமைத்தார்.பின்னர்  ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில்  3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெற உள்ளது.எனவே முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள் விவரம் :விராட் (கேப்டன் ),ரோகித் சர்மா(துணை கேப்டன்),ஷிகர் தவான்,ராயுடு,ஜாதவ்,பண்ட், தோனி,விஜய் ஷங்கர், முகமது சமி,சாஹல்,பூம்ரா,குல்தீப் ,கவுல் ,ஹர்டிக் பாண்டியா,ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.மேலும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்த நிலையில் இன்று முதலாவது ஒருநாள் நடைபெறுகிறது.இந்த போட்டியை  வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்