#INDvNZ: இன்று 4-ஆம் நாள் ஆட்டம் தொடக்கம்..!

இன்று 4-ஆம் நாள் ஆட்டம் காலை 9;30 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட இறுதியில் 84 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை இந்தியா எடுத்திருந்தது.
தொடர்ந்து 2-ஆம் நாள் விளையாடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மான் கில் 52, ஷ்ரேயாஸ் ஐயர் 105, ஜடேஜா 50 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 57 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 129 ரன்கள் சேர்த்தனர்.
3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்து நியூஸிலாந்து அணி விக்கெட்டை பறிகொடுக்க தொடங்க இறுதியாக நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அக்சர் படேல் 5, அஸ்வின் 3 விக்கெட்டை பறித்தனர்.
இந்திய அணி 49 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. தொடக்க வீரராக களமிங்கிய சுப்மன் கில் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப 3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்து 63 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது. களத்தில் புஜாரா 9, மயங்க் அகர்வால் 4 ரன்களுடன் உள்ளனர். இந்நிலையில், இன்று 4-ஆம் நாள் ஆட்டம் காலை 9;30 மணிக்கு தொடங்கவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025