இன்று ” தாதா” கங்குலியின் 47-வது பிறந்தநாள் !

Default Image

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி  தனது  47 -வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இப்போது உள்ள ரசிகர்களிடம்  ஆக்ரோஷமான கேப்டன் யார் என கேட்டால் அவர்கள் கூறுவது கேப்டன் கோலி என கூறுவார்கள்.

ஆனால் இதற்கு முன் இந்திய அணியில் ஆக்ரோஷமான கேப்டனாக கங்குலி வலம் வந்தார்.கங்குலி கேப்டனனாக இருந்த போது ஆஸ்திரேலியா போன்ற அணிகள் மைதானத்தில் அடங்கி தான் போவார்கள் அதனாலே கங்குலியை ரசிகர்கள் “தாதா “செல்லமாக அழைப்பார்கள்.

மேற்கு வங்காள மாநிலத்தில் ஜூலை 8-ம் தேதி 1972 -ம் ஆண்டு பிறந்தார்.சிறு வயதில் இருந்து கால்பந்து மீது தான் கங்குலிக்கு ஆர்வம் இருந்தது.பின்னர் அண்ணன் அளித்த பயிற்சியில் கிரிக்கெட் மீது ஆர்வம் தொடங்கியது.

1992-ம் ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாட தொடங்கினர்.த்னது முதல்சர்வதேச போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணியுடம் தொடங்கினர்.1996-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டி விளையாடியது.அது தான் கங்குலிக்கு முதல் டெஸ்ட் போட்டி விளையாடினர். முதல் டெஸ்ட்  போட்டியிலே சதம் விளாசினார்.

ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 4 ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் வீரர்.மேலும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 3 சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 1999-2000 -ம் ஆண்டு சூதாட்ட விவகாரத்தில் அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த சச்சின் மீது எழுந்ததால் பிசிசிஐ கேப்டனாக கங்குலியை தேர்வு செய்தனர்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 7212 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரத்து 363 ரன்களை குவித்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும் பறித்து சாதனை படைத்தார்.2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடிய நான்காவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் கங்குலி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்