இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான 3 வது டி – 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
முதல் டி-20 போட்டி:
இதைத்தொடர்ந்து,டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
2-வது டி20:
இதனையடுத்து,இந்தியா, இலங்கை இடையிலான 2-வது டி-20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற இருந்த நிலையில் கிருனால் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் போட்டி நேற்று ஒத்திவைக்கப்பட்டது. மேலும்,கிருனால் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,அவருடன் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர், இதனால்,புதிதாக 5 வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இதனையடுத்து,வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.இதனால், இதுவரை நடைபெற்ற டி-20 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
மோதல்:
இந்நிலையில்,இரு அணிகளுக்கிடையேயான 3-வது டி-20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால் இப்போட்டியில்,எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.இதனால்,போட்டி விறுவிறுப்பான நிலையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…