#TATAIPL2022:இன்று மோதும் 4 அணிகள் 2 போட்டிகள்!

Default Image

டெல்லி-கொல்கத்தா அணிகள்:

ஐபிஎல் தொடரில் 19-வது ஆட்டத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.இப்போட்டியானது மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் மைதானத்தில் நடைபெறுகிறது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தனது கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்த நிலையில் இன்றைய போட்டியையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.

அதே நேரத்தில் டெல்லி கேபிடல்ஸ் தனது கடைசி இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப ஆர்வமாக உள்ளது.இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் மொத்தம் 29 ஆட்டங்களில் மோதியுள்ளன.இதில் டெல்லி 12 போட்டிகளில் வெற்றியும்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

சாத்தியமான கொல்கத்தா லெவன்: அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (வி.கீ), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரேன், பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ரசிக் சலாம், வருண் சக்ரவர்த்தி.

சாத்தியமான டெல்லி லெவன்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ்/ரோவ்மேன் பவல், ரிஷப் பண்ட் (கேப்டன்&வி.கீப்பர்), சர்ஃபராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், அன்ரிச் நார்ட்ஜே.

ராஜஸ்தான்-லக்னோ அணிகள் மோதல்:

இதனைத் தொடர்ந்து,ஐபிஎல் 2022 இன் 20-வது போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான்-லக்னோ அணிகள் மோதுகின்றன.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3-இல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல் 3 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் தோல்வியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

சாத்தியமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்&வி.கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜிம்மி நீஷம், நவ்தீப் சைனி, டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

சாத்தியமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (வி.கீ), எவின் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்ப கவுதம், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்