ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்குகிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் இத்தொடருக்கான இந்திய அணி வீரர்கள் மும்பையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படட்னர். இத்தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது.ஆசிய கோப்பையில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.
வருகின்ற 19ஆம் தேதி இந்திய அணி தனது நிரந்தர எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது.ஆனால் இதற்கு முந்தைய நாளான 18 ஆம் தேதி இந்திய அணிக்கு ஹாங்காங் அணியுடன் ஒரு போட்டி உள்ளது.
இந்நிலையில் 16 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் புவனேஷ்வர் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
ஆசிய கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம் :
ரோகித் சர்மா (கேப்டன் ),தவான் (துணை கேப்டன் ),ராகுல் ,ராயுடு,மணிஷ் பாண்டே ,கேதார் ஜாதவ்,தோனி,தினேஷ் ,ஹர்டிக் பாண்டியா,குல்தீப்,சாஹல்,அக்சார் படேல் ,புவனேஸ்வர் குமார்,பூம்ரா,சர்தால் தாகூர் ,கலீல் அஹமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…