TNPLFinal: வெல்லப்போவது யார்? இன்று கோவை-நெல்லை அணிகள் மோதல்.!
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டியில் இன்று நெல்லை மற்றும் கோவை அணிகள் பலப்பரீட்சை.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 தொடரின் இறுதிப்போட்டி இன்று திருநெல்வேலியின் சங்கர் கிரிக்கெட் மைதானத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலின் அடிப்படையில், கோவை, திண்டுக்கல், நெல்லை மற்றும் மதுரை அணிகள் பிளே ஆப்ஸ்க்கு தகுதி பெற்றன.
இதில் முதல் தகுதிச்சுற்றில் திண்டுக்கல்லை வீழ்த்தி முதல் அணியாக கோவை அணி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அடுத்ததாக எலிமினேட்டர் சுற்றில் மதுரையை வீழ்த்தி, இரண்டாவது தகுதிச்சுற்றில் திண்டுக்கல்லை வீழ்த்தி நெல்லை அணி இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
அதன்படி நெல்லை மற்றும் கோவை அணிகள் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் களம் காணுகின்றன. நடப்பு இணை சாம்பியனான கோவை அணி இந்த டிஎன்பிஎல் தொடரில் லீக் சுற்றில் ஒரு முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளது, அதுவும் நெல்லை அணிக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இறுதிப்போட்டியில் வென்று, இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் கோவை அணியும், முதன்முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் நெல்லை அணியும் இன்று மோதுவதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.