நாளை கோலாகலமாக திண்டுக்கல்லில் தொடங்குகிறது டி .என்.பி .எல் போட்டி!
தமிழகம் முழுவதும் உள்ள திறமை வாய்ந்த கிராமப்புற மற்றும் மாவட்ட வீரர்களை விளையாடக்கூடிய அளவிற்கு டி .என்.பி .எல் போட்டி நடத்தப்படுகிறது.இப்போட்டிகள் மூலம் பல புதிய வீரர்களை உருவாக்கும் தளமாக உள்ளது.
4-ம் ஆண்டு டி .என்.பி .எல் போட்டிக்கான ஏல நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 45 வீரர்கள் 28 மாவட்டங்களை சார்ந்தவர்கள்.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இந்த முறை 5 மாவட்ட வீரர்களை தேர்வு செய்து உள்ளது.
இந்த டி .என்.பி .எல் போட்டிக்கு கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்தியா சிமெண்ட் குழுமத்தின் முன்னணி நிறுவனமான சங்கர் சிமெண்ட் டைட்டில் ஸ்பான்சராக திகழ்கிறது. இந்த வருடத்திற்கான முதல் போட்டி நாளை தொடங்க உள்ளது. இப்போட்டி திண்டுக்கல்லில் உள்ள நந்தம் என்.பி. ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் போட்டியில் முன்னாள் செம்பியன் சோப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோத உள்ளது.லீக் போட்டிகள் திண்டுக்கல் ,நெல்லையில் நடைபெற உள்ளது.ஆகஸ்ட் 15 -ம் தேதி வரை 32 போட்டிகள் நடைபெற உள்ளது.
நெல்லையில் வருகின்ற 22-ம் தேதி தொடங்க உள்ளது.இந்நிலையில் நேற்று நடந்த பேட்டியில் இந்தியா சிமெண்ட் இணை தலைவர் சண்முகம் கூறுகையில் , இந்த டி .என்.பி .எல் போட்டி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று உள்ளது.இதனால் தமிழக அணிக்கு சிறந்த வீரர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
டி .என்.பி .எல் போட்டியில் மூலம் வேகப்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ,சுழல் பந்து வீச்சாளர் நடராஜன் ஆகிய இருவரின் திறமை மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர்.இது டி .என்.பி .எல் போட்டிக்கு கிடைத்த வெற்றி.மேலும் அடுத்த ஆண்டு முதல் கோவையிலும் டி .என்.பி .எல் போட்டி நடத்தப்பட உள்ளது.