இந்திய அளவில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவது போல, தமிழகத்திலும் குறிப்பிட்ட மாவட்டங்கள் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் (TNPL) கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2016-க்குப் பிறகு டி20 தொடரில் மோதும் இந்தியா- ஜிம்பாப்வே..!
8வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஒவ்வொரு அணியிலும் 16 முதல் 20 வீரர்கள் வரையில் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் 70 லட்சம் மட்டுமே தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நட்சத்திர வீரர்களாக சாய் கிஷோர், நடராஜன், சஞ்சய் யாதவ், பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான ஏலத்தில் பங்கேற்றனர். இதில் திருப்பூர் தமிழன்ஸ் அணி தமிழக வீரர் நடராஜனை 11.25 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. மேலும் சாய் கிஷோரை 22 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இதுவரை டிஎன்பிஎல் வரலாற்றில் அதிகத் தொகைக்கு ஏலம் போன வீரர் சாய் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, திருச்சி அணி சார்பாக சஞ்சய் யாதவ் 22 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் அணிக்காக இந்திய அணி வீரர் அஸ்வின் விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…