TNPL 2023 Live: நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெறும் 28வது போட்டியில் திருச்சி வாரியர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மழையின் காரணமாக 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் களமிறங்கிய திருச்சி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய நெல்லை அணி 11.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் குவித்தது. இதனால் நெல்லை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வென்றது.