TNPL 2023 Live: நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டி திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டியாகும்.
இதற்கிடையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்பொழுது டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, முதலில் களமிறங்கிய சேலம் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது.
இதன்பின் மழையால் ஆட்டம் தடைபட்ட நிலையில், டிஎல்எஸ் முறைப்படி நெல்லை அணிக்கு 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு 129 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, களமிறங்கிய நெல்லை அணி 15.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்து, சேலம் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.