TNPL 2023 Live: கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய லைக்கா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் அதிகபட்சமாக துஷார் ரஹேஜா மட்டுமே 33 ரன்கள் குவித்துள்ளார். கோவை கிங்ஸ் அணியில் ஷாருக் கான் 3 விக்கெட்டுகளையும், முகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.