TNPL 2023 Live: கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய சேப்பாக் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்களும், சசிதேவ் 23 ரன்களும் குவித்துள்ளனர். இதனையடுத்து, களமிறங்கிய கோவை கிங்ஸ் அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 128 ரன்கள் எடுத்து, சேப்பாக் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (பிளேயிங் லெவன்):
பிரதோஷ் பால், என் ஜெகதீசன்(w/c), பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், எஸ் ஹரிஷ் குமார், உத்திரசாமி சசிதேவ், ரஹில் ஷா, ராமலிங்கம் ரோஹித், சந்தோஷ் ஷிவ், எம் சிலம்பரசன், எம் விஜு அருள்
லைகா கோவை கிங்ஸ் (பிளேயிங் லெவன்):
அதீக் உர் ரஹ்மான், ஜே சுரேஷ் குமார்(W), சாய் சுதர்சன், ராம் அரவிந்த், ஷாருக் கான்(C), எம் முகமது, யு முகிலேஷ், மணிமாறன் சித்தார்த், வள்ளியப்பன் யுதீஸ்வரன், ஜாதவேத் சுப்ரமணியன், கே கௌதம் தாமரை கண்ணன்