TNPL 2023 Live: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 23வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதன்படி, முதலில் களமிறங்கிய நெல்லை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை வென்றது.