TNPL 2023 Live: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26வது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதன்படி முதலில் களமிறங்கிய சேலம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 161 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 83* ரன்களும், விமல் குமார் 42 ரன்களும் குவித்தனர்.