இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் தொடர் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் மோதுகின்றன. தற்போது, இந்த போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 206 ரன்கள் என்ற இலக்கில் களமிறங்கிய நெல்லை அணி 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கோவை அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணியை வென்றது. இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோவை அணி 2 வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
நெல்லை ராயல் கிங்ஸ்:
அருண் கார்த்திக் (C), லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், அஜிதேஷ் குருசுவாமி, நிதிஷ் ராஜகோபால், ரித்திக் ஈஸ்வரன் (W), சோனு யாதவ், என்எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, எஸ் மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், லக்ஷய் ஜெயின் எஸ்.
லைகா கோவை கிங்ஸ்:
எஸ் சுஜய், ஜே சுரேஷ் குமார்(W), பி சச்சின், யு முகிலேஷ், ஷாருக் கான்(C), ராம் அரவிந்த், அதீக் உர் ரஹ்மான், எம் முகமது, மணிமாறன் சித்தார்த், ஜாதவேத் சுப்ரமணியன், வள்ளியப்பன் யுதீஸ்வரன்
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…