Tirupur win [Image source : Twitter/@TNPremierLeague]
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய NRK vs ITT போட்டியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய நெல்லை அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணியில் முதலில் களமிறங்கிய ராதா கிருஷ்ணன், துஷார் ரஹேஜா ஜோடி நல்லத்தொடக்கம் அமைத்தனர்.
ராதா கிருஷ்ணன் பொறுப்பாக விளையாடிய நிலையில் 34 ரன்களில் ஆட்டமிழக்க, துஷார் ரஹேஜா அரைசதத்தை தவறவிட்டு 49 ரன்களில் வெளியேறினார். இதன்பின், அனிருத் மற்றும் ராஜேந்திரன் விவேக் களமிறங்க, சோனு யாதவ் வீசிய பந்தில் 21 ரன்களுடன் விவேக் ஆட்டமிழந்தார்.
முடிவில், திருப்பூர் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை வென்றது. இதனால் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதில் அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 49 ரன்களும், ராதா கிருஷ்ணன் 34 ரன்களும், விவேக் 21 ரன்களும் குவித்துள்ளனர். நெல்லை அணியில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…