டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ITT vs SLST போட்டியில், சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் டிஎன்பிஎல் தொடரில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட் செய்ய களமிறங்கிய சேலம் அணி 20 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதில் சன்னி சந்து அரைசதம் அடித்து அசத்தினார்.
இதனையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் திருப்பூர் அணியில் முதலில் ராதாகிருஷ்ணன், துஷார் ரஹேஜா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் துஷார் ரஹேஜா 22 ரன்களில் ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய சாய் கிஷோர் பொறுப்பாக விளையாடி 26 ரன்கள் எடுத்தார்.
ஒருபுறம் நிதானமாக விளையாடிய ராதாகிருஷ்ணன் 16 மட்டுமே எடுத்து வெளியற, மறுபுறம் விஜய் சங்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய சதுர்வேத், ராஜேந்திரன் விவேக், அனிருத் மற்றும் புவனேஸ்வரன் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.
முடிவில், திருப்பூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சேலம் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 26 ரன்களும், துஷார் ரஹேஜா மற்றும் அனிருத் தலா 22 ரன்களும் குவித்தனர். சேலம் அணியில் சச்சின் ரதி, செல்வ குமரன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…