முக்கியச் செய்திகள்

‘டைம் அவுட்’ சர்ச்சை… பயத்துடன் அனுமதி கேட்ட கிறிஸ் வோக்ஸ்..!

Published by
murugan

இன்று 40 ஆவது உலகக்கோப்பை லீக் போட்டியில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இங்கிலாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் இறங்கிய  நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 339 ரன்கள் குவித்தனர். இதில் அதிகபட்சமாக  பென் ஸ்டோக்ஸ் 108 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 51 ரன்களும், தொடக்க வீரர் டேவிட் மாலன் 87 ரன்கள் எடுத்தனர்.

இதனால் நெதர்லாந்துக்கு 340 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த போட்டியின் போது 36-வது ஓவரில் மொயீன் அலி விக்கெட் வீழ்ந்தபோது பேட் செய்ய கிறிஸ் வோக்ஸ் களத்திற்கு வந்தார். கிரீஸுக்கு வந்தவுடன் கிறிஸ் வோக்ஸ் அவரது ஹெல்மெட் உடைந்ததை பார்த்து நேராக நடுவரிடம் சென்று ஹெல்மெட் உடைந்துவிட்டது என்று கூறிவிட்டு, வேறு ஹெல்மெட் கொண்டு வர பயத்துடன் சிரித்து கொண்டு அனுமதி கேட்டார். அவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான போட்டியில்  இலங்கை வீரர் மேத்யூஸ் இதுபோன்று ஹெல்மெட் உடைந்ததை பார்த்து வேறு ஹெல்மெட் கொண்டு வர அனுமதி கேட்டார். ஹெல்மெட் கொண்டு வர  நேரம் ஆனதால் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நடுவர்களிடம் முறையிட்டு  “டைம் அவுட் ”  முறையில் மேத்யூஸ் விக்கெட்டை இழந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்த முறையில் அவுட்டான முதல் வீரர் என்ற பெருமையை மேத்யூஸ் பெற்றார்.

40.1.1 இன் படி, ஒரு விக்கெட் விழுந்த பிறகு அல்லது ஒரு பேட்ஸ்மேன் ஓய்வு பெற்ற பிறகு புதிய பேட்ஸ்மேன் அடுத்த பந்தை 3 நிமிடங்களுக்குள் விளையாட தயாராக இருக்க வேண்டும். உலகக்கோப்பைக்கு இந்த வரம்பு 2 நிமிடங்கள் உள்ளது. புதிய பேட்ஸ்மேன் அவ்வாறு செய்யத் தவறினால், அவர் அவுட் என அறிவிக்கப்படுவார். இதற்கு ‘டைம் அவுட்’ என்று பெயர்.

40.1.2 இன் படி, புதிய பேட்ஸ்மேன் இந்த நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் (3 நிமிடங்கள்) முழுமையாக ஆடுகளத்தில் இல்லை என்றால், நடுவர் விதி 16.3  நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இதன் காரணமாக மேற்கண்ட விதியின்படி பேட்ஸ்மேன் “டைம் அவுட்” என்று அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

46 mins ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

1 hour ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

2 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

2 hours ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

2 hours ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

3 hours ago