சென்னையில் நடைபெறும் ஐபிஎல் பிளேஆப் போட்டிக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை.!
சென்னையில் நடைபெறும் பிளேஆப் சுற்று போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2023க்கான பிளேஆப் மற்றும் இறுதிப்போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளேஆப் சுற்றின் முதல் போட்டி(தகுதிச்சுற்று) மே 23 ஆம் தேதியிலும், இரண்டாவது போட்டி(வெளியேற்றுச்சுற்று) மே 24 ஆம் தேதியிலும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
இதற்கான டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே விற்கப்படுகிறது என இன்சைட் ஸ்போர்ட் தகவல் வெளியிட்டுள்ளது. கூட்ட நெரிசல் மற்றும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுகிறது என்பதால் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.