ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!
சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்க உள்ளது.

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் ஏப்ரல் 5, 2025 அன்று சென்னையில் உள்ள பிரபலமான எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் (சேப்பாக்கம்) நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஏப்ரல் 2) காலை 10:15 மணிக்கு ஆன்லைனில் தொடங்க உள்ளது.
டிக்கெட்டுகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaisuperkings.com மூலம் பெறலாம். பொதுவாக, சென்னை விளையாடும் போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது என்றாலே சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்துவிடும். எனவே, இந்த போட்டியை காண ஆர்வத்துடன் ரசிகர்கள் இருப்பதால் சரியான நேரத்தில் இணையதளத்தில் உள்நுழைந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது நல்லது.
சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாகும், இங்கு நடக்கும் போட்டிகளில் ரசிகர்களின் ஆரவாரமும் ஆதரவும் எப்போதும் உச்சத்தில் இருக்கும். எனவே, நீங்கள் இந்தப் போட்டியை நேரில் காண திட்டமிட்டால், நேரில் சென்று டிக்கெட் வாங்குவதற்கு முன் இணையதளத்தில் கிடைக்கும். அதற்கு நீங்கள் சரியான நேரத்தில் இணையதளத்திற்கு சென்று பதிவு செய்துகொள்ளவேண்டும்.
டிக்கெட் விலை குறித்த விவரங்கள்
- அடிப்படை ஸ்டாண்டுகள் (General Stands): ரூ.1,500 – ரூ.3,000
- நடுத்தர அளவிலான இருக்கைகள் (Mid-Tier Stands): ரூ.3,000 – ரூ.5,000
- பிரீமியம் இருக்கைகள் (Premium Stands): ரூ.5,000 – ரூ.10,000
- விஐபி/கார்ப்பரேட் பாக்ஸ்கள் (VIP/Corporate Boxes): ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அல்லது அதற்கு மேல்
ஒரு நபருக்கு அதிகபட்சம் 2 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025