CSK ரசிகர்களே., தொடங்கபோகுது டிக்கெட் விற்பனை! முக்கிய விவரங்கள் இதோ…

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் வழியாக இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கவுள்ளது.

CSK vs MI Tickets open

சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன. அடுத்த நாள் மார்ச் 23ஆம் தேதி அன்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு எந்தளவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்குமோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்நோக்கப்படும் கிரிக்கெட் போட்டியாக பார்க்கப்படுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி.

இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டிக்கான டிக்கெட் www.chennaisuperkings.com என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே புக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,700, ரூ.2,500 ரூ, 3,500, ரூ.4,000, ரூ.7,000 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த டிக்கெட்கள் மார்ச் 19 இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைன் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. மொபைல் நம்பர், பெயர் உள்ளிட்ட முக்கிய சுய விவரங்களை உள்ளீடு செய்து டிக்கெட்களை பெற்று கொள்ளலாம்.

CSK ரசிகர்களுக்காக சில வினாடி வினா போட்டிகளும் நடைபெற உள்ளது. அதனை விளையாடியும் டிக்கெட்களை இலவசமாக பெறலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட்டோடு சேர்த்து கார் பார்க்கிங் மற்றும் பைக் பார்க்கிங் டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Chennai Corporation Budget 2025
TN Ration shop
Sunita Williams - NASA
TN CM MK Stalin - Sunita Williams
Putin - Trump - Zelensky
sunita williams