திக்..திக்…இரண்டு முறையும் மிஸ்…நோ பாலால் தப்பித்த இந்திய அணி.!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், இதையடுத்து பேட் செய்ய களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. தற்போது 60 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 89 ரன்கள் எடுத்தும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்கள் எடுத்து இந்திய அணியை மீட்க போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் நிறையவே இருக்கிறது என்றே கூறலாம். ஏனென்றால், நேற்றைய ஆட்டத்தின் போது ரஹானே பேட் கம்மன்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆனதாக அறிவித்தார். பிறகு, அது மூன்றாவது நடுவருக்கு சென்றபோது நோ பால் என தெரிய வந்தது.
பிறகு, நிதானமாக விளையாடிய ரஹானே படி படியாக ரன்கள் எடுத்து அரைசத்தைதை கடந்தார். அவரை தொடர்ந்து இன்றும் ஷர்துல் தாகூருக்கு நிறையவே அதிர்ஷடம் வந்தது என்றே கூறலாம். நிறைய கேட்ச்களில் தப்பிய ஷர்துல் பேட் கம்மன்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆனதாக நடுவர் அறிவித்தார். பிறகு அது நோ பால் என தெரிய வந்தது. எனவே, இந்த இரண்டு பந்துகளும் நோ பல் ஆகா இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக இந்திய அணி இவ்வளவு தூரம் வந்திருக்குமா..? என்பது சந்தேகம் தான்.