இவ்வளவு வேகமாகவா பந்து வீசுவது ? 2 துண்டாக சிதறிய ஹெல்மெட்..!! வைரலாகும் வீடியோ.!
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் அர்ஷத் இக்பால் வீசிய பவுன்சர் பந்து, ஜிம்பாப்வே பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
மேலும் நேற்று நடந்த 2வது டி 20 போட்டியில் முதலில் ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து. அடுத்ததாக 119 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் தனது அணைத்து விக்கெட்டையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் ஜிம்பாப்வே அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரரான டினாஷே கமுன்ஹுகாம்வே பேட்டிங் செய்த போது பாகிஸ்தான் அணியின் அறிமுக இளம் வேக பந்துவீச்சாளர் அர்தஷ் இக்பால் பந்து வீசிய போது அவர் வீசிய பந்து டினாஷே கமுன்ஹுகாம்மின் ஹெல்மெட் மீது பட்டு அவரது ஹெல்மெட்டையே பதம் பார்த்தது.
அதன் பிறகு, பேட்ஸ்மேன் டினாஷே கமுன்ஹுகாம்வே தனது கிளவுஸ் மற்றும் ஹெல்மெட்டை கழட்டினார். கழட்டிவிட்டு அவருக்கு மூளை அதிர்ச்சி சோதனை நடத்தப்பட்டு மீண்டும் போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டது.
Those dreadlocks surely saved Kamunhukamwe from potential concussion after getting hit by an Arshad Iqbal bouncer ???? #ZIMvPAK @ZimCricketv #VisitZimbabwe pic.twitter.com/3n6oxjVn8K
— Kudakwashe (@kudaville) April 23, 2021