ஒரே போட்டி மூன்று சாதனை…! இந்தியாவுக்கு எதிராக ஆஸி. சிங்கப்பெண் அசத்தல்!!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியின் எல்லிஸ் பெர்ரி புதிய சாதனை படைத்துள்ளார்.
பிரிஸ்பேன்: நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரி மூன்று முக்கிய சாதனைகளை நிகழ்த்தி வரலாறு படைத்தார்.
இந்திய – ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் தொடரில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. இதனையடுத்து நேற்றைய தினம் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 60 ரன் மற்றும் ஜார்ஜியா வோல் 130 ரன்கள் எடுத்து அவர்களது பார்ட்னர்ஷிப்பில் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.
தொடர்ந்து களமிறங்கிய பெர்ரி 72 பந்துகளில் சதம் அடித்து, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிவேக சதம் என்ற சாதனையை படைத்தார். அவர் 75 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 105 ரன்கள் குவித்தார். இவ்வாறு பட்டைய கிளப்பிய 105 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
இது தவிர, பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையை எலிஸ் பெர்ரி பெற்றார். ஒருநாள் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த நான்காவது ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையை பெர்ரி பெற்றுள்ளார். 7000 ரன்கள், 300 விக்கெட்டுக்களை எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் 13 டெஸ்ட்டில் விளையாடியுள்ள அவர் 928 ரன்கள், 39 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.
எல்லிஸ் பெர்ரி கேரியர் :
பேட்டிங் : ஒருநாள் போட்டிகளில் 4,064 ரன்கள், டி20 போட்டிகளில் 2,088 ரன்கள், டெஸ்டில் 928 ரன்கள்.
பந்துவீச்சு : ஒருநாள் போட்டிகளில் 165, டி20 போட்டிகளில் 126, டெஸ்டில் 39 விக்கெட்டுகள்.