மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!
அகமதாபத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்தது.
அதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பாக, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரெல் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அவரைப்போலவே, கே.எல்.ராகுலும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த அணியின் கருண் நாயர், அக்சர் பட்டேல், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் ஆகியோர் 30 ரன்களை கடந்தனர்.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சிராஜ் வீசிய பந்தில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியாக டெல்லி அணியின் அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கிய குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், அதிரடியாக விளையாடி வரும் ஜோஸ் பட்லர், அவரது குஜராத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
ஜோஸ் பட்லர் 42 பந்துகளில் 77 ரன்கள் விளாசியுள்ளார். குறிப்பாக, 15ஆவது ஓவரின் முதல் 5 பந்துகளிலும் அவர் பவுண்டரி அடித்து அசர வைத்தார். குறிப்பாக, சேஸிங்கில் அரை சதம் விளாசிய ஜோஸ் பட்லர, 97 ரன்கள் விளாசி சதத்தை மிஸ் செய்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார், நடப்பு ஐபிஎல் சீசனில் இது இவருடைய 3வது அரை சதமாகும்.
இறுதியில், நான்கு பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கை முறியடித்தது, 19.2 ஓவர்களில் 204/3 என்ற கணக்கில் முடித்தது. ஆம், குஜராத் அணி 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025