அந்த 2 பேர் தான் ரோஹித்-கோலி இடத்தை நிரப்ப போறாங்க..! முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் கருத்து!

Published by
அகில் R

ZIMvIND : இந்திய அணி ஜிம்பாப்வே விளையாடிய பிறகு இளம் வீரர்களாகிய இவர்கள் தான் ரோஹித்-கோலி இடத்தை நிரப்ப போகிறார்கள் என்று கருத்து தெரிவித்து உள்ளார் முன்னாள் வீரர்.

கடந்த ஜூலை-6 முதல் ஜூலை-14 வரை ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என அபாரமாக கைப்பற்றியது. கில் தலைமையிலான இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் படுதோல்வி அடைந்தனர். ஆனால், அதன்பிறகு நடைபெற்ற 4 போட்டிகளிலும் இந்திய அந்த வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 5-வது  மற்றும் கடைசி டி20 போட்டியின் போது இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றிருப்பார்கள். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான சபா கரீம் இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை பிடிப்பதற்கு இனி சூப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருக்கிறார்கள் என பேசி இருக்கிறார்.

இது குறித்து சபா கரீம் சோனி ஸ்போர்ட்ஸ்ஸில் பேசிய போது, “டி20 கிரிக்கெட் போட்டிகளில் தற்போது அதிரடியான விளையாட்டை இந்திய அணி முன்னோக்கி எடுத்துள்ளது. இது இந்திய அணிக்கும் தேர்வாளர்களுக்கும் ஒரு நல்ல செய்தி தான். முதல் டி20 போட்டியில் இந்தியா தோற்றாலும் அங்கிருந்து வலுவான கம்பேக் கொடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரின் பார்ட்னர்ஷிப்பை பற்றியும், அவர்கள் இடது- வலது கை ஜோடியாக இருப்பதையும் நாம் அடிக்கடி பேசி கொண்டு தான் வருகிறோம்.

நம் இந்திய அணியில் தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளன. ரோகித், விராட் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில்இனி விளையாடப் போவதில்லை. எனவே கில்-ஜெய்ஸ்வால் அந்த இடத்திற்கு தயாராக இருப்பதாக நான் கருதுகிறேன். அதே போல இன்னும் சில வீரர்களும் தயாராக உள்ளனர். எனவே அவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது தேர்வாளர்களின் கை யில் உள்ளது. இந்த இளம் இந்திய வீரர்கள் சீனியர் அணியை போலவே அதிரடியாக பேட்டிங் விளையாடி தொடரை வென்று காட்டியுள்ளனர்” என்று கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

“டாக்டர் இல்லை., சிகிச்சை இல்லை, விக்னேஷ் உயிரிழந்து விட்டான்.!” கதறி அழும் அண்ணன்.!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…

10 mins ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

2 hours ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

2 hours ago

Live : இலங்கை அதிபர் தேர்தல் முதல்., செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார் வரையில்…

சென்னை : நடைபெற்ற இலங்கை  புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர்  அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…

2 hours ago

ரூ.397 கோடி ஊழல்? செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பரபரப்பு புகார்!

சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…

3 hours ago

நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…

4 hours ago