இலங்கையில் மேஜர் கிளப்ஸ் லிமிடெட் ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பனகோடாவில் உள்ள ராணுவ மைதானத்தில் நடந்த போட்டியில் ப்ளூம்ஃபீல்ட் கிரிக்கெட் மற்றும் அத்லெடிக்ஸ் கிளப்புக்கு எதிரான குரூப் ஏ போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இடது கை பேட்ஸ்மேனான திசாரா பெரேரா ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த இலங்கையை சேர்ந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பெரேரா இன்னிங்ஸில் 20 பந்துகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் 5 வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார்,அந்நேரத்தில் ஓவர்கள் 41 ஆக குறைக்கப்பட்டிருந்தது.பெரேரா இந்த 6 சிக்சர்களை பகுதிநேர ஆஃப்-ஸ்பின்னரான தில்ஹான் கூரே ஓவரில் அடித்து சாதனை படைத்துள்ளார்.
அவர் அந்த போட்டியில் 13 பந்துகளில் 52 ரன்களை எடுத்தார்.இதில் எட்டு சிக்சர்களை அடித்து 400 ஸ்ட்ரைக் வீதத்தில் விளையாடினார்.
ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியல்:
ஒரே ஒவேரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் பெரேரா 9 வது நபராக இணைந்துள்ளார்.சர் கார்பீல்ட் சோபர்ஸ் (1968), ரவி சாஸ்திரி (1985), ஹெர்ஷல் கிப்ஸ் (2007), யுவராஜ் சிங் (2007), ரோஸ் வைட்லி (2017), ஹஸ்ரத்துல்லா ஜசாய் (2018), லியோ கார்ட்டர் (2020), கீரோன் பொல்லார்ட் (2021), மற்றும் திசாரா பெரேரா (2021).
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…