இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!
இந்த வருடம் ஐபிஎல் போட்டி தொடக்க விழாவானது கொல்காத்தாவில் மட்டுமல்லாது ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்தொடங்க உள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
வழக்கமாக ஐபிஎல் தொடக்க போட்டியானது நடப்பு சாம்பியன் அணியின் சொந்த மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும். அதேபோல, அந்த மைதானத்தில் மட்டுமே ஐபிஎல் தொடக்க விழா நடைபெறும். அந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொள்வர். ஆட்டம் பாட்டம் பாடல் இசை நிகழ்ச்சி என கொண்டாட்டங்கள் களைகட்டும். அதன் பிறகே ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகும். அது அந்த ஒரு மைதானத்தில் மட்டுமே இந்த நிகழ்வு நடைபெறும்.
ஆனால், இந்த முறை, பிசிசிஐ-யானது ஐபிஎல் தொடக்க நாள் கொண்டாட்டத்தை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் நடத்த திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன், சென்னை MA.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், மும்பை வான்கடே மைதானம், பெங்களூரு சின்னசாமி மைதானம், ஹைதிராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானம், விசாகப்பட்டினம் YSR கிரிக்கெட் மைதானம், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், கவுகாத்தி கிரிக்கெட் மைதானம், லக்னோ கிரிக்கெட் மைதானம், சண்டிகர் கிரிக்கெட் மைதானம், ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழாவில், பாடகி ஸ்ரேயா கோஷல், பாலிவுட் நடிகை திஷா பதானி ஆகியோர் பெயர்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஷ்ரத்தா கபூர், வருண் தவான், அரிஜித் சிங், கரண் அவுஜ்லா ஆகியோர் இன்னும் உத்தேச பட்டியலில் உள்ளனர். மற்ற பிரபலங்கள் பெயர் அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. அனைத்து இடங்களிலும் தனித்தனியாக விழா நடைபெறுமா அல்லது திரையிடல் மட்டும் செய்யப்படுமா என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.