ரிக்கி பாண்டிங் : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணி சார்பில் பெரிய தாக்கமாக ரிஷப் பண்ட் அமைவார் என ஆதரவாக ரிக்கி பாண்டிங் பேசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரிஷப் பண்ட் நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக இவர் சிறப்பாக விளையாடி இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சிறிய தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தார். இவர் 10 போட்டியில் விளையாடி 160.60 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 371 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆனால், ஒரு அணியின் கேப்டனாக நன்றாக விளையாடினாலும் பிளே-ஆஃப் சுற்றில் அணியை கொண்டுவருவதற்கு முயற்சி செய்தும் அது முடியாமலே போனது. இந்நிலையில், அடுத்ததாக நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கும் இந்தியா அணியில் அவர் தேர்வு செய்ப்பற்றிருந்தார்.
தற்போது, இவர் தான் இந்த டி20யில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டெல்லி அணியின் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் ஐசிசிக்கு அளித்த ஒரு நேர்காணலில் கூறி இருந்தார். அவர் பேசுகையில், “இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் மீண்டும் விளையாட இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் அருகில் இருந்து ரசித்துள்ளேன். இது ஒரு சிறந்த கம்பேக், மேலும் அவர் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன். உண்மையில் சொல்லப் போனால் அவரது பேட்டிங் பற்றி யாருக்கும் கவலையில்லை. ஏனெனில் அவர் எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்பதும் அவரது பேட்டிங் திறன் என்ன என்பதும் அனைவருக்குமே தெரியும்”, என்று கூறி இருந்தார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…