இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை இல்லாத அளவுக்கு சொதப்பும் ஹைதராபாத் அந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. முதலில் களமிறங்கிய SRH அணியின் தொடக்க வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.
20 ஓவரில் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக விளையாடி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் அடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்த தொடரில் நேற்று மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்ததுடன் சேர்த்து 6-வது முறையாக இந்த சீசனில் தோல்வியை சந்தித்தது.
நேற்று தோல்விக்கு பிறகு பேசிய பாட் கம்மின்ஸ் “நாங்கள் ஆரம்பத்திலேயே சரியாக விளையாடவில்லை. 35/5 என்ற நிலையில் இருந்தோம். இது எங்களுக்கு பெரிய பின்னடைவாக இருந்தது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்திருந்தோம் என்றால் இந்த நிலைமையில் இருந்திருக்கமாட்டோம்.
இந்த மாதிரி ஒரு சமயத்தில் கிளாசனும் அபினவ் மனோகரும் சிறப்பாக விளையாடி எங்களுக்கு ஒரு மரியாதைக்குரிய ஸ்கோரைப் பெற்றுத் தந்தனர்.பிட்ச் மிகவும் மோசமாக இல்லை. ஆனால், பேட்ஸ்மேன்கள் புத்திசாலித்தனமாக விளையாடியிருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பிட்ச்சை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப ஆட்டத்தை விளையாடினாள் மட்டும் தான் எதிரணிக்கு நல்ல டார்கெட் வைக்கமுடியும்.அந்த விஷயத்தில் நாங்கள் தவறு செய்துவிட்டோம் என நினைக்கிறேன்.
எங்களின் முதல் போட்டியில் 280+ ரன்கள் எடுத்தோம். ஆனால், அடுத்த போட்டியில் மோசமாகச் சரிந்தோம். அதைப்போல, இந்த போட்டியை சேர்த்து 6-வது தோல்வி இதுதான் டி20 கிரிக்கெட் – எதுவும் முன்கூட்டியே கணிக்க முடியாது.இது இன்னும் வேலை செய்யவில்லை. இனி சில வெளியூர் போட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பிட்ச்சையும் விரைவாக மதிப்பீடு செய்து, அதற்கேற்ப விளையாட வேண்டும்” எனவும் தோல்வியின் வேதனையில் பாட் கம்மின்ஸ் பேசினார்.