‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!

Published by
அகில் R

Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக்  சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள் குறித்தும் போட்டி முடிந்த பிறகு பேசி இருந்தார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி மிகச்சிறப்பாக பந்து வீசி சிஎஸ்கே அணியை 20 ஓவர்களில் 162 ரன்களுக்கு சுருட்டியது. அதனை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் சிஎஸ்கே அணி நிர்ணயித்த ஸ்கோரை பஞ்சாப் சேஸ் செய்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சின் போது முதல் ஓவரை வீசுவதற்கு தீபக் சஹர் வந்தார். அப்போது முதல் ஓவரின் 3-வது பந்தில் ஓடி வரும் பொழுது காயம் காரணமாக வெளியேறி இருப்பார். அதன் பிறகு அந்த ஓவரை ஷரதுல் தாகூர் வீசி இருப்பார். அதை தொடர்ந்து தீபக் சஹரின் உடல் நிலை குறித்தும், சிஎஸ்கே அணியின் நேற்றைய போட்டியின் மாற்றங்கள் குறித்தும் போட்டி முடிந்த பிறகு பத்திர்கையாளர்கள் சந்திப்பில் ஸ்டீபன் ஃப்ளெமிங் பேசி இருந்தார்.

அவர் பேசிய போது, “தீபக் சாஹர் உடல் நிலை நன்றாக இல்லை, அவரின் மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவரை பிசியோ மற்றும் டாக்டர்கள் பொறுப்பெடுத்து கண்காணித்து கொண்டு வருகின்றனர். அதே சமயம் எங்கள் அணியில் இருக்கும் இலங்கை வீரர்கள் எந்த நேரத்திலும் விசா பெறவதற்கு நாட்டிற்கு திரும்ப தயாராக உள்ளனர். இந்த தொடரில் அவர்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், ரிச்சர்ட் க்ளீசன் இன்று நன்றாக பந்து வீசினார்.

மேலும், துஷார் தேஷ்பாண்டே காய்ச்சலில் இருக்கிறார். இப்படி, அணியில் இன்று சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. விரைவாக ஒரு புதிய திட்டத்திற்கு ஏற்ப அவர்கள் விளையாடவும், ஒரு புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடவும் சமயம் இல்லாத காரணத்தால் இந்த போட்டியில் சற்று திணறினோம்”, என்று போட்டி முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பயிற்சியாளர்  ஃப்ளெமிங் பேசி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

4 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

4 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

6 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

9 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

9 hours ago