இதனால் தான் நாங்கள் தோல்வியடைந்தோம் ..! தோல்விக்கு பிறகு தவான் பேசியது இதுதான் ..!
![Shikar Dhawan [file image]](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/04/Shikar-Dhawan-file-image.webp)
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியை குறித்து பேசி இருந்தார்.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி நூல் இலையில் போட்டியை தவறவிட்டது. பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங்கும் மற்றும் அசுதோஷ் சர்மாவும் இறுதி வரை போராடியும் நூல் இலையில் வெற்றியை தவறவிட்டனர். இந்த போட்டிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார்.
அவர் கூறுகையில், ” ஷஷாங்க் சிங்கும், அசுதோஷும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை ஒரு கேப்டனாக நான் உணர்கிறேன். மேலும், நாங்கள் பந்து வீசும் போது அவர்களை முடிந்த அளவிற்கு நன்றாக கட்டு படுத்தினோம். ஆனால், எங்கள் பேட்டிங்க் பவர்பிளேவில் எங்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. பேட்டிங் பவர்பிளேவில் நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்தோம்.
அங்குதான் நாங்கள் தோல்வியடைந்தோம், போட்டியின் முடிவில் தான் பவர்பிளேவில் ரன்ஸ் எடுக்காததன் முக்கிய துவம் தெரிந்தது. நாங்கள் ஒவ்வொரும் இந்த தவறை திருத்தி கொள்வோம் மேலும் அடுத்த போட்டியில் எங்களது அணுகுமுறையை மாற்றி அமைப்போம். எங்கள் பந்து வீச்சில் கடைசி பந்தில் நாங்கள் ஒரு கேட்சை கைவிட்டோம். அந்த ஓவரில் நாங்கள் அவர்களை 10-15 ரன்களில் வைத்திருக்க முடியும் ஆனால் தவற விட்டுவிட்டோம்.
எங்களது பேட்டிங் தான் இந்த போட்டியில் எங்களை வீழ்த்தியது. எங்கள் அணியில் இளைஞர்கள் இத்தகைய நிலைத்தன்மையுடன் விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”, என்று போட்டி முடிந்த பிறகு ஷிகர் தவான் தோல்வியின் காரணத்தை விளக்கி கூறி இருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025
12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
March 3, 2025
2025 ஆஸ்கார் விருதுகள்! 5 விருதுகளை தட்டி தூக்கிய அனோரா!
March 3, 2025