இதனால் தான் தோல்வியடைந்தோம் …! டூப்ளெஸ்ஸி சொன்ன காரணம் இதுதான் !!

du plessis

சென்னை : நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்த பிறகு பெங்களூரு அணியின் கேப்டனான டூப்ளெஸ்ஸி இதனால் தோற்றோம் என காரணத்தை விளக்கி கூறி இருந்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரரான விராட் கோலி மற்றும் டூப்ளெஸ்ஸி ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

அவர்களை தொடர்ந்தும் எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாமல் அவுட் ஆகி வெளியேறி கொண்டிருந்தனர். பெங்களூரு அணி வீரர்களின் அவ்வப்போது அடித்த பவுண்டரிகள் தான் அந்த அணிக்கு ஒரு தேவைப்பட்ட ஸ்கோரை கொண்டு வந்தது. இதனால் இறுதியில் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணியின் பட்டிதார் 34 ரன்களும், விராட் கோலி 33 ரன்களும் எடுத்திருந்தனர். ராஜஸ்தான் அணியில் அவேஷ் கான் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

அதன் பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் சிறப்பாக தொடங்கி நடுவில் போட்டியை கோட்டைவிடும் கட்டத்தில் இருந்தனர். அதன் பின் ரியல் பராக் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் நிலைத்து நின்று மற்றும் தேவையான இடத்தில் அதிரடி காட்டினார்கள். இதனால் வெற்றியின் அருகில் சென்ற ராஜஸ்தான் அணியை, ரோவ்மன் பவல் அவரது ஸ்டைலில் போட்டியை முடித்து வைக்க ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் காரனமாக நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஹைதரபாத் அணியுடனான குவாலிபயர்-2ம் போட்டியில் ராஜஸ்தான் அணி மோதவுள்ளது. இந்த போட்டி முடிந்த பிறகு பெங்களூரு அணியின் கேப்டனான டூப்ளெஸ்ஸி தோல்வியடைந்த பிறகு பேசி இருந்தார். அவர் பேசுகையில், “இன்றைய போட்டியில் நாங்கள் சற்று ரன்கள் கம்மியாகவே எடுத்திருந்தோம் மேலும் 2-வது இன்னிங்ஸில் பனிப்பொழிவும் இருந்தது. எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சண்டையிட்டதற்கு பெருமை. இந்த மைதானத்தை பொறுத்த வரை 180 ரன்கள் என்பது ஒரு நல்ல ஸ்கோர்.

அதே போல இந்த சீசனில் இம்பாக்ட் பிளேயர் விதியால் பல மாற்றங்கள் மாறியுள்ளது. 9 போட்டிகளிருந்து 1 வெற்றியுடன், மற்ற அணிகள் சரிந்திருக்கலாம். ஆனால், நாங்கள் தொடர்ந்து 6 வெற்றி பெற்றோம். எங்கள் அணியின் இளம் வீரர்கள் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தினர்கள். தொடர்ச்சியாக 6 வெற்றி பெறுவது எளிதல்ல. இந்த போட்டியில் கூடுதலாக 15-20 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக அமைந்திருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்”, என்று போட்டி முடிந்த பிறகு கேப்டன் டூப்ளெஸ்ஸி பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்