இதன் காரணமாகத்தான் ரஹானேவுக்கு வாய்ப்பு – ரவி சாஸ்திரி ஓபன் டாக்!

Ravi shashtri

ரஹானேவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இதனால்தான் வாய்ப்பு என ரவி சாஸ்திரி கருத்து.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் பலபரிச்சை நடத்துகிறது. இந்த சமயத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை கடந்த வாரம் அறிவித்திருந்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

இதனைத்தொடர்ந்து, இந்தியாவில் ஐபிஎஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்கள் முன்பு 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், அஜிங்க்யா ரஹானே, மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் மினி ஏலத்தில் அஜிங்க்யா ரஹானேவை யாரும் எடுக்காத நிலையில், அடிப்படை விலை ரூ.50 லட்சத்தில் சென்னை வாங்கியது. இது ரசிகர்களுக்கு ஒரு பெரிய அதிருப்தியை ஏற்படுத்திருந்தது. ஏனென்றால், 30 வயதை கடந்த ரஹானே டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், விமர்சகர்கள் வாய் அடைக்கும் வகையில், சென்னையில் அணியில் ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரட்டி வருகிறார்.

ரஹானேவின் அதிரடியான ஆட்டத்தை பார்த்து கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் ஆச்சிர்யத்தில் உள்ளனர். இந்த சமயத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடியதால் வருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என பல்வேறு கருத்துக்களை பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் மட்டுமே, ரஹானேவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துவிடவில்லை என முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 3 ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடியதால் தான் ரஹானேவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது என சிலர் நினைக்கின்றனர்.

ரஹானே 6 மாதங்களாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி 600 ரன்களுக்கு மேல் குவித்தபோது, அவர்கள் விடுமுறை எடுத்து காட்டுக்குள் சென்றுவிட்டார்கள் போல என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்