ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக விளையாடி 20 அவர்கள் முடிவில் 192 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட் விழுந்த காரணத்தினால் ஆரம்பத்தில் ரன்ஸ் எடுக்க சருக்கியது. அதன் பிறகு படிப்படியாக முன்னேறி வந்த நிலையில் கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் பஞ்சாப் அணி இருந்தது.
இதனால் கடைசி ஓவரில் மும்பை அணியின் ஆகாஷ் மத்வாள் பந்த வீச வந்தார். அப்போது மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா களத்தில் நின்று கொண்டு ஃபில்டிங்கை செட் செய்தார். அதாவது அவர் முகமது நபியை கவர் திசையில் தூரத்தில் நிற்க வைத்துவிட்டு மற்ற வீரர்களை ஒவ்வொரு இடத்தில் நிற்க வைத்தார்.
அவர் நிக்க வைத்தது போல பேட்டிங் செய்த ரபடா பந்தை நபியிடம் அடித்து இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்தார். அப்போது முகமது நபி அந்த பந்தை இஷான் கிஷனுக்கு த்ரோ செய்தார். பந்தை பிடித்த இஷான் கிஷன் அவரை ரன் அவுட் செய்துவிட்டார். லெஜண்ட் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் இது நடந்தது என ரசிகர்கள் அனைவரும் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
மேலும் புள்ளிப்பட்டியில் 9-தாவது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது இந்த பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 7-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…