விராட் கோலி என்னிடம் இதான் கூறினார்.. நான் தான் சிங்கிள் எடுக்க மறுத்தேன் – கேஎல் ராகுல்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 17-ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்து. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக தன்சித் ஹசன் 51, லிட்டன் தாஸ் 66, மஹ்முதுல்லா 46 ரன்கள் எடுத்து அணிகயை சரிவில் இருந்து மீட்டனர்.
இந்திய அணி பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனைத்தொடர்ந்து 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆரம்பத்திலேயே ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். பின்னர் இருவரும் 48 மற்றும் 53 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலி தனது அனுபவத்தின் மூலமும், நிதானமான ஆட்டத்தின் மூலமும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 97 பந்தில் 103 ரன்கள் எடுத்து சதம் விளாசினார். இதனிடையே ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழக்க கேஎல் ராகுல், கோலிவுடன் சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு எடுத்து சென்றனர். இறுதியாக இந்திய அணி 41.3 ஓவரில் 261 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
இதனிடையே, விராட் கோலி சதம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதாவது, இந்த போட்டியின் இறுதி நேரத்தில் விளையாடிய விராட் கோலி, தான் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக 2 ஓவர்கள் அவரே பந்துகளை சந்தித்து விளையாடினார். அதே போன்று விராட் கோலி பவுண்டரி லைன் வரை பந்தை அடித்தாலும் கே.எல் ராகுல் சிங்கிள் ஓடாமல் அவர் சதம் அடிப்பதற்காக உதவினார்.
அதுமட்டுமில்லாமல், நடுவருக்கு விராட் கோலிக்கு கொடுக்கப்பட வேண்டிய வொயிடு ஒன்றினை கொடுக்காமல் விட்டார். இப்படி கோலி சதம் அடிப்பதற்காக களத்தில் இருந்த வீரர் மற்றும் அம்பயர் என இருதரப்பும் உதவியது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. உலக கோப்பை போன்ற தொடர்களில் ரன் ரேட் மிக அவசியம், இதனால் விரைவாக ரன்களை அடித்து அணியை வெற்றி பெற வைத்திருக்க வேண்டும் என வருகின்றனர். உலககோப்பை போட்டியில் இவ்வாறு சுயநலமாக நடந்து கொண்டது தவறு என்றும் வருகின்றனர்.
இந்த நிலையில், போட்டிக்கு பிறகு பேசிய கேஎல் ராகுல், நான் தான் சிங்கிள் வேண்டாம் என மறுத்தேன். சிங்கிள் எடுக்கவில்லை என்றால் மோசமானதாக பார்ப்பார்கள். என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக விளையாடுவதாக மக்கள் நினைப்பார்கள் என விராட் கோலி என்னிடம் கூறினார். ஆனால், நாம் எவ்வித சிரமம் இல்லாமல் வெற்றி பெறலாம், நீங்கள் சத்தை நிறைவு செய்யுங்கள் என்று நான் சொன்னேன் என தெரிவித்துள்ளார்.
ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி கூறுகையில், ஜடேஜாவிடம் இருந்து ஆட்ட நாயகன் விருதை திருடியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உலகக் கோப்பை போட்டியில் அணிக்காக நான் பெரிய பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தேன். கடந்த முறை அதிக அரை சதம் அடித்தேன். இதனால் இம்முறை பெரியதாக அடிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தேன். இதைத்ததன் கில்லிடம் கூறினேன் என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025