ஐபிஎல் 2025 : மெகா ஏலம் இப்படி தான் இருக்கும்! வெளியான அதிர்ச்சி தகவல்!
நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு அணி 5 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை : இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தை குறித்த விதிமுறைகள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை பிசிசிஐ விரைவில் வெளியிடவும் இருக்கிறது. இருப்பினும், இந்த மெகா ஏலத்தின் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அந்த மாற்றங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சளிக்கும் வண்ணமே அமைந்துள்ளது. அந்த விதிமுறைகள் என்னவென்றால், இதற்கு முன்பு நடைபெற்ற ஏலங்களில் 4 வீரர்களை ஒரு அணி தக்கவைத்து கொள்ளலாம் எனவும் 2 முறை RTM கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் இருந்தது.
ஆனால், நடைபெறப்போகும் இந்த மெகா ஏலத்தில் ஒரு அணி 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் எனவும் RTM கார்டுகளைப் பயன்படுத்த முடியாது எனவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் IPL ரசிகர்களிடையே அதிர்ச்சி அளிக்கும் வகையிலே அமைந்துள்ளது.
அதற்குக் காரணம் இந்த விதிப்படி பார்த்தால் ஐந்து வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்பதால் தங்களுக்கு பிடித்த அணியில் உள்ள பிடித்த வீரர்கள் வேறு அணிக்கு செல்வதற்கான அதிக வாய்ப்புகள் அமைந்திருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்து வருகிறனர்.
இந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் விதிமுறைகளை பற்றி ஆலோசிக்க சமீபத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை பிசிசிஐ நடித்தியது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால், ஒரு அணி கூறும் கருத்து மற்றொரு அணிக்கு முரண்பாடாகவே அமைந்தது.
குறிப்பாக பெரும்பாலான அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், 3 வீரர்களுக்கு RTM கார்டுகளை பயன்படுத்தலாம் எனவும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு ஒரு சில அணி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அப்போது அந்த கூட்டம் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் முடிவடைந்தது.
இதனால், எல்லா அணிகளுக்கும் ஏற்றது போலவே பொதுவான விதிகளை ஐபிஎல் ஏலத்தில் கொண்டு வரவேண்டும் என பிசிசிஐ-யும் இதுவரை ஐபிஎல் ஏலத்தின் விதிகளை அறிவிக்காமலே தாமதப் படுத்தி வருகின்றனர். இருப்பினும், இதுகுறித்து இறுதி முடிவு எடுத்துள்ளதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பிசிசிஐ வெளியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.