“ரோஹித், தோனியிடம் இருந்து கத்துக்கிட்டது இது தான்” மனம் திறந்த ரிஷப் பண்ட்!
ரோஹித்திடம் இருந்து அன்பாக இருக்கவும், தொனியிடம் இருந்து செயல் முக்கியம் என்பதையும் கற்றுக்கொண்டதாக ரிஷப் பண்ட் கூறினார்.
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவர், ஐபிஎல் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணிக்காக எடுக்கப்பட்டிருந்தார். இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். இந்த நிலையில், லக்னோ அணியின் கேப்டனாக பதவியேற்ற பிறகு பேசிய ரிஷப் பண்ட்,தான் விளையாடிய வெவ்வேறு கேப்டன்களிடமிருந்து விளையாட்டின் பல்வேறு அம்சங்களைப் பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், ” நான் நிறைய கேப்டன்கள் மற்றும் பல மூத்த வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். ஓர் அணி கேப்டனிடம் இருந்து மட்டுமல்ல. அனுபவம் உள்ள மூத்த வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆட்டம் முன்னேறும் விதத்தை கருத்தில் கொண்டு அனைத்து மூத்த வீரர்களிடமிருந்தும் நிறைய கற்றுக்கொள்ளலாம்.
ஆட்டம் முன்னேறும் விதம், விளையாட்டு அனுபவம் உள்ள மூத்த வீரர்கள் ஏராளம். கேப்டன் மட்டுமின்றி அனைத்து சீனியர்களிடமிருந்தும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.” என்று கூறினார்.
ரோஹித் சர்மா பற்றி பேசுகையில், “என்னுடைய கேப்டன்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். ரோஹித்திடம் இருந்து ஒரு வீரரை எப்படி அன்புடன் கவனித்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். நான் அப்படிப்பட்ட கேப்டனாக இருக்க விரும்புகிறேன்” என்றார்
தொடர்ந்து தோனி பற்றி பேசுகையில், “முடிவுகளை விட செயல்தான் முக்கியம்’ என தோனி அடிக்கடி கூறுவார். நான் இதை என் நினைவில் வைத்து விளையாடுவேன்”என்றும் ரிஷப் பண்ட் கூறினார்.