என் ரசிகர்களுக்கு என்னை பற்றி தெரியாதாது இதுதான்..  – மனம் திறந்த ஹர்திக் பாண்டியா. 

Hardik Pandiya :- இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா தற்போது DY Patil T20 கோப்பையில் ரிலையன்ஸ் 1 எனும் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார். இந்நிலையில்,  UK 07 ரைடர் என்ற யூடுப் சேனலின் வீடியோ ஒன்றில் அவர் மனம் திறந்து சில விஷயங்களை கூறி உள்ளார். UK 07 ரைடர் யூடுப் சேனலில், அந்த சேனலின் உரிமையாளர் பெரிய பெரிய ஸ்போர்ட்ஸ்  கார்களை வைத்திருக்கும் பெரிய பெரிய பிரபலங்களை சந்தித்து அவர்களுடன் சிறுது நேரம் உரையாடுவார். அதை அவரது யூடூப் சேனலில் பதிவிடவும் செய்வார்.

Read More :- ஆட்டத்திற்கு திரும்பிய கேப்டன் பாண்டியா.! இனிமே அதிரடி தான்!

அப்படி ஒரு அரட்டை உரையாடலாக ஹர்திக் பாண்டியவிடம் உரையாடும் பொழுது அவர் மனம் திறந்து சில விஷயங்களை கூறி உள்ளார். அதில் உங்களை பற்றி உங்களது ரசிகர்களுக்கு தெரியாதது என்ன என்று அந்த UK 07 ரைடர் கேள்வி கேட்டார். அதற்கு, ” என் ரசிகர்களுக்கு என்னை பற்றி தெரியாதது ஒன்று தான் நான் நன்றாக ஊர் சுற்றுபவன் என்று எனது ரசிகர்கள் நினைக்கிறார்கள் ஆனால் உண்மை என்னவென்றால் நான் வெளியில் செல்லவே மாட்டேன்.

மேலும், வெளியில் சென்று சுற்றுவது எனக்கு புடிக்காது. எனக்கு வீட்டில் இருக்கதான் புடிக்கும். கடந்த 3 ஆண்டுகளாக நான் வெளியில் செல்லவில்லை.  சந்தர்ப்ப சூழ்நிலையாலும் சில தவிர்க்க முடியாத காரணத்தாலும்  ஒரே ஒரு முறை என் நண்பர்களுடன் வெளியில் சென்றேன். நான் வீட்டில் இருக்க விரும்புவன். காயம் ஏற்பட்டதிலிருந்து கடந்த 50 நாட்களாக நான் எனது வீட்டில் இருக்கும் லிஃப்டை கூட பார்த்ததில்லை.

Read More :- BCCI : இஷான் – ஷ்ரேயஸுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ ..! சொன்னதை செஞ்சுக்காட்டிய ஜெய்ஷா ..!

நான் எப்போதும் வீட்டில் உள்ள ஜிம்மிலும், ஹோம் தியேட்டர் முன்னிலும் தான் இருப்பேன். நான் விரும்பும் அனைத்து விஷயங்களும் எனது வீட்டில் உள்ளது. நான் அதனுடன் தான் எப்போதும் செலவிடுவேன்”, என்று  UK 07 ரைடர் யூடுப் சேனலில் கூறி இருந்தார். மேலும் அந்த யூடுபர், நீங்கள் ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் வைரலான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து கேட்டதற்கு அவர், “இந்த ஸ்போர்ட்ஸ் கார் எனக்கு டெஸ்ட் டிரைவ்விற்காக அனுப்பி வைக்கபட்டுள்ளது.

இதை பற்றி நான் ஊடகங்கலில் கருத்துகள் தெரிவிக்க மாட்டேன். ஊடகங்களிலிருந்து நான் சற்று விலகி இருக்கிறேன். அது தான் எனக்கு தொந்தரவாக அமையாது”, என்று UK 07 ரைடருக்கு பதிலளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்