பத்து ஆண்டுகளாக எனக்கு பக்க பலமாக இருப்பது இதுதான் – ஹர்ஷல் படேல் ஓபன் டாக்..!!
பத்து ஆண்டுகளாக எனக்கு பக்க பலமாக இருப்பது ஸ்லோவர் பந்து தான் என்று வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் தெரிவித்துள்ளார்.
14 வது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் தனது மிரட்டலான பந்துவீச்சால் அனைத்து ரசிகர்கள் மனதில் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் இடம்பிடித்துவிட்டார். ஆம், நேற்று நடந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்த நிலையில் போட்டி நடந்து முடிந்தவுடன் பேசிய ஹர்ஷல் படேல் கூறுகையில் ” கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு ஸ்லோவர் பந்து எனக்கு பக்க பலமாக உள்ளது. யார்க்கர் பந்துகளை வீச நான் பயிற்ச்சி செய்து வருகிறேன். டெத் ஓவர்களில் நீங்கள் பந்து வீச வேண்டும் என்றால் நீங்கள் நிச்சயமாக யார்க்கரை நம்ப வேண்டும். யார்க்கர் பந்துகளை நான் நீண்ட காலமாக வீசி வருகிறேன், ஆனால் அதை போட்டியில் எடுக்கும் அளவுக்கு எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இப்போது, கடந்த 15-20 நாட்களில் நான் ஒரு யார்க்கர் பந்து வீச வேண்டும் மற்றும் அதை நம்பிக்கை பெற வேண்டும் ” என்றும் கூறியுள்ளார்.
சிறிய வயதில் இருந்தே கிரிக்கெட் மேல் அதிக விருப்பம் கொண்ட ஹர்ஷல் படேலிற்கு பெரிதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் இவர் குஜராத்தில் உள்ளூரில் நடந்த போட்டிகளில் விளையாடினர். கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காததால் இவரது கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா விற்கு சென்றுள்ளது. ஆனால் ஹர்ஷல் படேல் செல்லவில்லை அவருக்கு கிரிக்கெட் தான் முக்கியம் என்று இந்தியாவில் தங்கிவிட்டார்.
அதற்கு பிறகு குஜராத் அணியில் இருந்து வெளியேறி ஹரியானாவிற்கு சென்று கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்றார். மேலும் முக்கியமாக பெங்களூர் அணியில் அவர் தேர்வானது, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மிகவும் அருமையாக விளையாடியதுதான் காரணம்.
அங்கு சிறப்பாக விளையாடிதுமட்டுமில்லாமல் இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலே 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும் மும்பைக்கு எதிரான போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையும் படைத்தார் என்றும் கூறியுள்ளார்.