Gautam Gambir[file image]
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார்.
நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்சி ஆகிய மூன்றிலும் சிறப்பாக திகழ்ந்து வருகிறார். கடந்த ஒரு 4 போட்டிகளில் இவரது விளையாட்டு சற்று தோய்வு அடைந்துள்ளது என கூறலாம். அதே நேரம் கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை தழுவியது. முதல் அணியாக சிறப்பாக விளையாடி 16 புள்ளிகளை பெற்ற நிலையில் தொடர்ந்து 4 தோல்விகளை பெற்று வெற்றிக்காக திணறி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேகேஆர் அணியின் ஆலோசகராகவும் செயலாற்றி வரும் கவுதம் கம்பிர் ஸ்போர்ட்ஸ் கீடா பத்திரிகையில் சஞ்சு சாம்சனை பற்றி கூறி இருந்தார். அவர் பேசிய போது, “தற்போது, நட்சத்திர வீரராக திகழும் சஞ்சு சாம்சனுக்கு டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்காக சிறந்த வெற்றிகளை சேர்ப்பதற்கு அவருக்கு ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதே போல் சஞ்சு சாம்சனுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் போதுமான அளவிற்கு உள்ளது. மேலும், அவர் ஒன்றும் அறிமுக வீரர் இல்லை, அதே போல ஐபிஎல் தொடரிலும் சஞ்சு சாம்சன் நிறைய வெற்றிகளை பெற்றுள்ளார். இதனால் இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்ல முயற்சிக்க வேண்டும். இது போன்ற உலக அரங்கில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படும் போது, அதை உலகம் குறித்து வைத்து கொள்ளும்.
மேலும், இதுதான் சரியான டைம் விளையாட்டில் சரியாக செயல்பட்டால் உலகம் எப்போதும் மறக்காது. இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சனின் பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்சி என மூன்றிலும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்த ஒரு பெரிய தவறையும் அவர் இதுவரை செய்யவில்லை. மேலும், ராஜஸ்தான் அணியை வழிநடத்திய அனுபவத்தை டி20 உலகக்கோப்பையில் பேட்டிங்கில் வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன்”, என்று கவுதம் கம்பிர் ஸ்போர்ட்ஸ் கீடாவில் பேசிய போது கூறி இருந்தார்.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…